பெட்ரோலியப் பொருட்களை சுத்திகரிக்கும் துறையின் செயல்பாடுகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் விதமாக இந்தப் படிப்பு அமைந்துள்ளது. கச்சா எண்ணெயிலிருந்து, நாம் அன்றாடம் பயன்படுத்தும் பெட்ரோலியப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பின் மூலம் மாணவர்கள் நவீன பெட்ரோலிய சுத்திகரிப்பின் அடிப்படை விஷயங்களை கற்றுக் கொள்ள முடியும். அத்துடன் பெட்ரோலிய கச்சா எண்ணெயிலிருந்து, மார்கெட்டில் அதிகம் தேவை உள்ள பொருட்களை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ளவும் பயிற்சியளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.