பி.பி.எம். ஷிப்பிங் இளநிலை பட்டப்படிப்பானது, சரக்குகளை இடமாற்றும் செய்யும் நிறுவனங்களின் மனித வளத்தை நிறைவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட 3 ஆண்டுகால படிப்பாகும். 6 செமஸ்டர்களைக் கொண்ட இப்படிப்பில் சேர பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம்.
ஒரு நிறுவனத்தின் சரக்கையோ அல்லது சரக்குகளை கையாளும் நிறுவனமோ, ஒரு சரக்கை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கோ, நாட்டிற்கு ஏதேனும் ஒரு போக்குவரத்து சாதனத்தைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யும் போது ஏற்படும் சூழ்நிலை சவால்களை எதிர்கொள்ளும் அனைத்துத் திறனையும் வளர்க்கும் விதத்தில் இப்பாடப்பிரிவு அமைந்துள்ளது.
இப்பாடப்பிரிவில் சேரும் மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு மற்றும் ஆங்கில இலக்கண அறிவு இருப்பது அவசியமாக உள்ளது. இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்களே இப்படிப்பை வழங்குகின்றன.
கல்வி நிறுவனம்
இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களில் அமெத் பல்கலைக்கழகமும் ஒன்றாகும்.
வேலை வாய்ப்பு
துறைமுகம், பொதுப்பணித்துறை, தனியார் ஏற்றுமதி நிறுவனங்கள், இறக்குமதி நிறுவனங்கள், கிடங்குகள் பராமரிப்பு, சரக்கு கையாளும் நிறுவனங்களில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.