பேச்சுலர் ஆப் பிசிகல் எஜுகேஷன் என்பதன் சுருக்கமே பி.பீ.எட். ஆகும். இப்படிப்பு மற்றும் பயிற்சியில் உடலை வலிமையாக வைத்துக் கொள்வதற்கான அனைத்து விஷயங்களும் புத்தகம் வாயிலாகவும், உடற்பயிற்சி வாயிலாகவும் கற்பிக்கப்படும்.
ஆல் இந்தியா கவுன்சில் ஆப் பிசிகல் எஜுகேஷன் (ஏஐசிபிஇ) கீழ் இப்படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடிப்பவர்கள் மேற்கொண்டு இதிலேயே முதுகலை படிப்பையும் மேற்கொள்ளலாம்.
கல்வித் தகுதி
ஓராண்டு பி.பீ.எட்., படிப்பை பயில, ஏதேனும் ஒரு இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கொண்ட பி.பீ.எட். படிக்க உடற்பயிற்சிகல்வியில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். சில கல்வி நிறுவனங்கள் இப்படிப்பில் மாணவர்களை சேர்க்க நுழைவுத் தேர்வையும் நடத்துகின்றன.
வேலை வாய்ப்பு
இப்படிப்பை முடிப்பவர்கள் விளையாட்டுக் கருவிகளை தயாரிக்கும் நிறுவனங்கள், உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுத் துறை, விளையாட்டு செய்திப் பிரிவு, கல்லூரி, பள்ளிகளில் உடற்பயிற்சி ஆசிரியராவது, விளையாட்டு அணிகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றுவது போன்று பல்வேறு வாய்ப்புகளைப் பெறலாம். விளையாட்டுத் துறையில் சாதிக்க விரும்புபவர்கள் இத்துறையை தேர்வு செய்யலாம்.
கல்வி நிறுவனங்கள்
டாக்டர் பி.ஆர். அம்பேத்கார் யூனிவர்சிட்டி, பி.எச்.யூ., கான்பூர் யூனிவர்சிட்டி, ஆச்சார்யா நாகார்ஜுனா யூனிவர்சிட்டி ஆகியவை இப்படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களாகும்.