தாவரங்கள் பற்றியும் அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் படிக்கும் உயிரியல் கல்வி தாவரவியல் எனப்படுகிறது. சிறு செடிகள் முதல் காட்டில் உள்ள பெரிய மரங்கள் வரை அனைத்து தாவரங்களைப் பற்றியும் தாவரவியல் அலசுகிறது. உயிர் தொழில் நுட்பம் என்பது மரபணுவியல் தொழில் நுட்பத்தின் உதவியுடன் உயிருள்ள செல்கள் மற்றும் நுண்ணுயிரிகள் பற்றி படிக்கும் கல்வி. இந்த இளநிலைப் பட்டப்படிப்பில் உயிர் தொழில் நுட்பத்தின் வரலாறு மற்றும் பார்மாசுட்டிகல் ஆராய்ச்சி, விவசாயத் துறை உற்பத்தியில் நவீன முறைகள் போன்றவற்றில் உயிர் தொழில் நுட்பத்தின் பயன்பாடு போன்ற விஷயங்கள் கற்றுத் தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.