இந்த பட்ட படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நோயாளிகளின் உணவு முறையை திட்டமிடுதல், நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குதல், உணவு மற்றும் ஊட்டச்சத்து பிரிவில் தரம் , நிர்வாக பணிகளை மேற்கொள்ளுதல் தொடர்பான பயிற்சியில் அளிக்கப்படும். உணவு பொருட்களின் தரம், உணவு பொருட்களை சந்தைப் படுத்துதல் முதலிய துறைகளிலும் போதுமான பயிற்சி வழங்கப்படும். உணவு பழக்கவழக்கத்தில் மாற்றம் தேவைப்படுவர்களுக்கு ஆலோசனை அளித்தல், உணவு துறை நிர்வாகத்தை கம்ப்யூட்டர் உதவியோடு மேற்கொள்ளுதல் முதலிய அனுபவத்தையும் இந்த பாடத்திட்டம் வழங்கும்.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.