மருத்துவத் துறையில் நோயாளிகளின் குறைபாட்டை விரைவாகவும், பக்க விளைவுகள் இன்றியும் தீர்ப்பதற்கு ஏற்ற வகையிலான மருந்துப் பொருட்களை தயாரிக்கும் அறிவியல் பார்மசூட்டிக்ஸ் எனப்படுகிறது. மக்களுடைய தேவைக்கேற்ப சுகாதாரப் பொருட்களை பெருமளவில் உற்பத்தி செய்வது, பாதுகாப்பான முறையில் பேக் செய்வது, வினியோகிப்பது போன்றவற்றில் பார்மசூட்டிகல் இன்ஜினியர்களின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது. மருந்துப் பொருட்களின் தயாரிப்பில் பயன்படும் அனைத்து தொழில் நுட்பங்களையும் இந்த இளநிலைக் கல்வியின் மூலம் மாணவர்கள் கற்றுக் கொள்ள முடிகிறது. இது ஒரு உயர் தொழில் நுட்பக் கல்வியாகும்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.