பாலிமர் டெக்னாலஜி வளர்ந்து வரும் தொழில்நுட்பத் துறைகளில் ஒன்று. பாலிமரின் துருப்பிடிக்காத தன்மை, அதன் வலிமை காரணமாக வீட்டு உபயோகப் பொருட்களிலிருந்து விண் கலங்கள் வரை இதன் பயன்பாடு உள்ளது. மின் உற்பத்தி, விமானங்கள், பேக்கேஜிங் தொழில் ஆகியவற்றின் இதன் பயன்பாடு அதிகம். இதுகுறித்த தொழில்நுட்பங்கள் பாலிமர் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
பாலிமர் தொழில் நிறுவனங்கள், உற்பத்தித் தொழில் நிறுவனங்களில் பாலிமர் டெக்னாலஜி படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உண்டு
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.