இந்த இளநிலைக் கல்வியின் மூலம் மாணவர்களுக்கு மரக்கட்டை அறிவியல், கூழாக்குதல், பிளீச்சிங், சரக்கு தயாரித்தல், காகித இயந்திரங்கள், பொருளாதாரம் போன்ற விஷயங்களில் பயிற்சியளிக்கப்படுகிறது. காகிதம் மற்றும் காகிதக் கூழ் தொழில் நுட்பத்தில் அடிப்படையான பயிற்சி இந்த பட்டப்படிப்பின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்தப் படிப்பை முடித்தவுடன் காகிதம் தயாரிப்பதில் உள்ள தொழில் நுட்பங்களை மாணவர்கள் தெளிவாக அறிந்து கொள்வதுடன், இந்த துறை சார்ந்த வேலைவாய்ப்புகளைப் பெறமுடியும்.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.