பார்மசி என்பது மருந்துப் பொருட்களின் தயாரிப்பு, விளைவுகள், அளவுகள், வினியோகம் போன்றவை பற்றிய துறை. இந்த துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை இந்த இளநிலை தொழில் நுட்பக் கல்வி தருகிறது. குறிப்பாக, மருந்து பொருட்களின் உற்பத்தி, பார்மசூட்டிகல் புரடக்சன், பார்மசூட்டிகல் வளர்ச்சி மற்றும் பார்மாசுட்டிகல் செயல்பாடுகள் போன்றவற்றில் மாணவர்களுக்கு தேவையான பயிற்சியை இந்த கல்வியின் மூலம் பெற முடிகிறது. மருந்துப் பொருட்களின் உற்பத்தியில் ரசாயனங்களைக் கலப்பதில் பழைய முறைக்குப் பதில் நவீன தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நுட்பங்கள் பற்றியும் மாணவர்களுக்குப் பயிற்சி தரப்படுகிறது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.