பெட்ரோலிய எரிபொருள் இருக்கும் இடங்களை டிரில்லிங் மூலம் கண்டறிந்தல், கச்சா எண்ணையை எடுத்துச் சுத்திகரித்தல் உள்ளிட்ட பணிகளைக் கொண்டது பெட்ரோலியம் இன்ஜினியரிங் துறை. இதற்கேற்ற வகையில் இது தொடர்பான தொழில்நுட்ப, இன்ஜினியரிங் பாடங்கள் பெட்ரோலியம் இன்ஜினியரிங் மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மசகு எண்ணைய் நிறுவனங்களில் பெட்ரோலியம் இன்ஜினியரிங் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும்.