அச்சுத் தொழில்நுட்பத் துறையில் பட்டப்படிபைக் கற்றுத்தரும் முன்னோடிக் கல்வி நிலையங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. பிரின்டிங் டெக்னாலஜி படிக்கலாம். பல்வேறு வகையான அச்சிடும் முறைகள், நவீன அச்சுத்துறையில் கம்ப்யூட்டரின் பங்கு, மேலாண்மை போன்ற பல்வேறு அம்சங்கள் இப்படிப்பில் கற்றுத்தரப்படுகின்றன. புத்தக வெளியீட்டு நிறுவனங்கள், பேக்கேஜ் பிரின்டிங் பிரிவுகள், அச்சக இயந்திரத் தயாரிப்பு நிறுவனங்கள், அரசு அச்சகங்கள், இ-பப்ளிஷிங் நிறுவனங்கள் போன்ற இடங்களில் இப்படிப்பைப் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். தற்போது பிரின்டிங் டெக்னாலஜி படித்த மாணவர்கள் சாப்ட்வேர் நிறுவனங்களிலும் வேலைக்குச் சேருகிறார்கள்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.