இந்தியாவில் ஒரு சில கல்வி நிலையங்கள்தான் சான்ஸ்கிரிட் விஷாரத் பி.ஏ. பட்டப்படிப்பை அளிக்கிறது.
பூனேவில் உள்ள திலக் மஹாராஷ்டிரா வித்யாபீடமும், கவிக்குல்குர காளிதாஸ் சான்ஸ்கிரிட் பல்கலைக்கழகமும் இந்த பட்டப்படிப்பை வழங்குகின்றன.
பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இந்த பட்டப்படிப்பில் சேரலாம். பிளஸ் 2 வகுப்பில் சான்ஸ்க்ரிட்டை மொழிப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
3 ஆண்டுகள் கொண்ட இந்த படிப்பை படித்து முடித்தவர்களுக்கு மொழி ஆசிரியர் வேலை, மொழி பெயர்ப்பு போன்றவற்றில் வேலை வாய்ப்பு கிட்டும்.