பி.ஏ. பாலிடிக்ஸ் படிப்பை இந்தியாவில் சில குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மட்டுமே வழங்குகின்றன. இந்திய மற்றும் உலக நாட்டு அரசியல் நிலவரங்கள் குறித்து படிக்கும் இப்படிப்பு மூன்று ஆண்டுகால படிப்பாகும். இப்படிப்பில் சேர பிளஸ் 2 பொதுத் தேர்வில் அல்லது அதற்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியம்.
இப்படிப்பை முடித்தவர்கள் மேற்கொண்டு எம்.ஏ. பாலிடிக்ஸ் படிக்கலாம். இந்த படிப்பிற்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் வேலை வாய்ப்பு உள்ளது. பெரும்பாலான பல்கலைகள் இப்படிப்பை இரட்டை மேற்படிப்பு பி.ஏ.,-எம்.ஏ., என சேர்த்து வழங்குகின்றன.