பிளஸ் 2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். மூன்றாண்டுகளைக் கொண்ட இப்படிப்பை குறிப்பிட்ட சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே வழங்குகின்றன.
சந்தை நிலவரம், நிதி மேலாண்மை, கணக்குப்பதிவியல், எலக்ட்ரானிக் தொடர்பு சாதனங்கள் மூலமான விற்பனை முறைகள், முதலீடு, சந்தைப்படுத்துதல், வியாபார தொடர்பு போன்றவை குறித்து இப்படிப்பு அமையும். தற்போது ரீடெய்ல் மேனேஜ்மென்ட் படிப்பு படித்தவர்களுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன.
படித்து முடித்து நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய அனுபவத்தோடு வேலை தேடும் இளைஞர்களுக்கு உயர் பதவிகளில் பணி வாய்ப்பு கிடைக்கிறது.