மருத்துவ அறிவியலின் ஒரு பிரிவான இந்தப் படிப்பில், மருந்துகளைத் தயாரித்தல், உரியவர்களுக்கு வழங்குதல், சரியாக நிர்வகித்தல் போன்ற நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. பல நோய்களைக் கட்டுப் படுத்தி, மனித சராசரி ஆயுள் காலத்தை நீட்டிக்கச் செய்வதில் மருத்துவ உலகிற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர்கள் பார்மசிஸ்டுகள். மூலிகை மற்றும் தாவரங்களில் உள்ள மருந்துப் பொருட்களுடன் வேதி மருந்துகளின் நிலை பற்றி இப்படிப்பில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
படிப்பு காலம் 4 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.