பெட்ரோலிய எண்ணெய் எரிபொருள் இருக்கும் இடங்களை டிரில்லிங் மூலம் கண்டறிதல், கச்சா எண்ணையை சுத்திகரித்தல் உள்ளிட்ட பணிகளைக் கொண்டது பெட்ரோலியம் டெக்னாலஜி துறை. இதற்கேற்ற வகையில் இது தொடர்பான தொழில்நுட்ப, பொறியியல் பாடங்கள் பெட்ரோலியம் டெக்னாலஜி மாணவர்களுக்குக் கற்றுத்தரப்படுகின்றன.
பெட்ரோ கெமிக்கல் நிறுவனங்கள், எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்கள், மசகு எண்ணைய் (லூப்ரிகண்ட்ஸ்) நிறுவனங்களில் பெட்ரோலியம் டெக்னாலஜி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.