வேலை காரணமாக ஏற்படும் உடற்பாடுகளை பற்றிய படிப்பு இது. அந்தக் குறையுடன் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உதவுவது பற்றி ஆக்குபேஷனல் தெரபியில் விவாதிக்கப் படுகிறது. குறையை நிறையாக்கி, சுதந்திரமுடனும், சிறப்பாகவும் பணி புரியும் வழிகள் இதில் ஆராயப் படுகிறது. உடற் குறைகள் உள்ளவர்கள் தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்ய உரிய கருவிகளை வடிவமைப்பது, சூழலுக்கு ஏற்றபடி தம்மைத் தகவமைத்துக் கொள்வது போன்ற பணிகளிலும் இந்தப் படிப்பு கவனம் செலுத்துகிறது. இதைப் பாடமாக படித்தவர்கள் ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் ஆகவோ, டெக்னிகல் உதவியாளராகவோ பணிக்குச் செல்ல முடியும்.