கண்ணிலோ,பார்வையிலோ ஏற்படும் கோளாறுகளுக்கு, அறுவை சிகிச்சை அல்லாமல் பரிசோதிக்கும் துறைக்கு ஆப்டோமெட்ரி என்று பெயர். கண்களைச் சோதிப்பது, பார்வையை பரிசோதிப்பது, பார்வைக் கோளாறுகளைச் சரி செய்ய உதவும் லென்ஸ்களைப் பரிந்துரைப்பது போன்ற கண் டாக்டரின் இடையீடு இல்லாமல் செய்யக் கூடிய பணிகளை இந்தப்படிப்பு முடித்தவர்கள் செய்கிறார்கள். கண்களைப் பாதுகாக்கக் கற்றுத் தருவது, தற்காப்பு முறைகளைச் சொல்லித் தருவது போன்றவையும் ஆப்டோமெட்ரிக்ஸ் படித்து அப்பணியில் சேர்ந்து பணியாற்றும் ஒருவரது கடமையாகிறது.
படிப்பு காலம் 4 1/2 ஆண்டுகள். இதே பிரிவில்
முதுகலை உண்டு.