உடல் ஆரோக்கியத்தை பற்றி விரிவாக இந்த படிப்பில் கற்பிக்கப்படுகிறது. சிறியவர்கள் முதல் பெரியர்வகள் வரை உடலுக்கு கொடுக்கும் ஒரு வித தனி பயிற்சி உடற்பயிற்சி ஆகும். இந்த படிப்பை படிப்பதால் வருங்காலத்தில் நல்ல உடல் ஆரோக்கியமும், எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். இதில் இளநிலை மற்றும் முதுநிலை போன்ற படிப்புகள் வழங்கப்படுகிறது.
கல்வித் தகுதி: விண்ணபிக்க விரும்பும் மாணவர்கள் பிளஸ்2 வில் ஏதேனும் ஒரு பிரிவில் நல்ல மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும்.
இந்த பாடப்பிரிவை வழங்கும் கல்வி நிறுவனங்கள்:
அண்ணா பல்கலைக்கழகம், சென்னை
அலகாபாத் பல்கலைக்கழகம், உத்திர பிரதேசம்
ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகபட்டினம்
பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம், உத்திர பிரதேசம்
மணிப்பூர் பல்கலைக்கழகம், மணிப்பூர்
வேலைவாய்ப்பு:
இத்துறையை தேர்வு செய்து படிக்கும் மாணவர்கள் ஆராய்ச்சி தொடர்பான படிப்புகளை மேற்கொள்ளலாம். வெளிநாடுகளில் இந்த படிப்பிற்கு வரவேற்பு அதிகம். பள்ளி மற்றும் கல்லூரிகளில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றலாம்.