ரேடியாலஜி எனும் கதிரியக்கத் துறையில் உதவியாக இருப்பதற்குப் பயன்படும் வகையில் சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த துறையில் சான்றிதழ் பெறுவதன் மூலம், நோயாளிகளின் பிரச்னைகளைப் புரிந்து கொண்டு மருத்துவர்களுக்கு உதவிகரமாக இருக்க முடியும். நோயாளிகளுக்கு கதிரியக்கம் வேலை செய்யும் முறைகளை விளக்கி, எக்ஸ் ரே கதிர்களை தடுக்கும் விதமான நகை போன்றவற்றை நீக்கச் சொல்லி, அவர்களை தயார்படுத்துவது ரேடியாலஜிகல் அசிஸ்டன்டுகளின் பணியாகும். இத்துறையில் பணி புரிய விரும்புபவர்களுக்கு இந்த சான்றிதழ் படிப்பு உதவுகிறது.