அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளில் பயன்படும் விதமாக இந்த படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுவோர் தங்களுடைய திட்டங்களை திறம்பட செய்து முடிப்பதை நோக்கமாகக் கொண்டு இதில் பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலம் தவிர, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், சட்டீஸ்கர், உத்தராஞ்சல் போன்ற மாநிலங்களில் உள்ள சில கல்வி மையங்களில் இந்தியிலும் இந்த சான்றிதழ் படிப்பை பெற முடிகிறது.