கோழிப்பண்ணை, அது சார்ந்த தொழில்களில் ஈடுபட இந்த படிப்பு பயிற்சியளிக்கிறது. முட்டை, இறைச்சி விற்பனைக்காக, கோழிப்பண்ணையில் கோழிக் குஞ்சு, வாத்து முதலிய பறவையினங்கள் பராமரிக்கப்படுகின்றன. பவுல்ட்ரி சயின்ஸ், கோழிப்பண்ணை நிர்வாகத்தில் பயிற்சி அளிக்கிறது. பயோகெமிஸ்ட்ரி, பறவை உடற்கூறியல், உணவூட்டம், உணவு அறிவியல், தொழில்நுட்பம்,மனித மற்றும் விலங்கு, சுகாதாரம், பாதுகாப்பு முதலிய பாடங்கள் இந்த படிப்பில் இடம்பெறுகின்றன.