இந்த சான்றிதழ் கல்வி கற்றுக்கொள்பவர்களின் ஆற்றலையும், திறனையும் வளர்த்து நல்ல ஆரோக்கியமான மனித உறவுகளையும், தகவல் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளவும், முடிவெடுக்கும் ஆற்றலை வளர்த்துக்கொள்ளவும், மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ், எஸ்.டி.டி போன்றவற்றில் இருந்து பாதுகாத்து கொள்ளவும் உதவுகிறது. இதன் முக்கிய நோக்கம் எச்.ஐ.வி., என்றால் என்ன?, அது ஏன்? எப்படி? ஏற்படுகிறது என்றும், அவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பது பற்றியும், குடும்ப நல கல்வி மற்றும் அது தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ளவும் உதவுகிறது.
தகுதி: 10 மற்றும் பிளஸ் 2 தேறியவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள்.