விற்பனைத் துறையில் தற்காலத்தில் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமே இல்லை. எல்லா நிறுவனங்களும் தங்களுடைய உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்ய திறமையான இளைஞர்களை தேடிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் விற்பனைத் துறை குறித்த நுட்பங்கள் அறிந்த இளைஞர்கள் கிடைப்பது அரிதாக உள்ளது. மார்கெட்டிங் துறையில் அனைத்து நுட்பங்களை அறிந்து கொள்வதற்கும், விளம்பரம், மக்கள் தொடர்பு, விற்பனை மேம்பாடு போன்றவை குறித்த அடிப்படைக் கூறுகளை கற்றுக் கொள்வதற்கும் இந்த சான்றிதழ் படிப்பு உதவுகிறது.