தற்போதைய தொழில் மயமான உலகத்தில் மார்க்கெட்டிங் மிக முக்கியப் பங்கை வகிக்கிறது. தொழில் நிறுவனத்திற்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையில் மார்க்கெட்டிங் துறை இயங்குகிறது. மார்க்கெட்டிங் இன்றி தொழில் வளர்ச்சி சாத்தியமில்லை. எனவே மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள் மட்டுமின்றி, நேரடியாக அதில் தொடர்பு இல்லாதவர்களும் மார்க்கெட்டிங் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவ்வகையில், மார்க்கெட்டிங் மேலாண்மை சான்றிதழ் படிப்பு இத்துறை குறித்த அடிப்படை விஷயங்களை கற்றுத் தருகிறது.