இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்துடன் மத்திய ஆற்றல் துறையும், ஆற்றல் நிதிக்கழமும் இணைந்து அட்வான்ஸ்டு சர்டிபிகேட் இன் பவர் டிஸ்ட்ரிபூசன் மேனேஜ்மென்ட் எனும் படிப்பை வழங்குகின்றன. இது எலக்ட்ரிக்கல் பிரிவில் திறமையை வளர்த்துக்கொள்வதற்காக துவங்கப்பட்டுள்ளது. இது மூன்று கட்டாய பாடம் உட்பட பதினாறு பிரிவுகளை கொண்டு ஆங்கில வழியில் பயிற்றுவிக்கப்படும்.
தகுதி: இன்ஜினியரிங் பட்டம் அல்லது டிப்ளமோ அல்லது அறிவியல்/வணிகம்/கலை பிரிவில் பட்டம் பெற்றவர்கள் அல்லது அதற்கு சமமாக இரண்டு வருட ஆற்றல்/எலக்ட்ரிக்கல் துறையில் அனுபவம் உள்ளவர்கள்.