இலக்கியம், மீடியா, வரலாறு, தத்துவம், சமூகவியல், தொழில், நிர்வாகவியல் போன்ற துறை சார்ந்த விஷயங்கள் இந்த சான்றிதழ் படிப்பு பாடத்திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, பால் சார்ந்த அடக்குமுறைகள், பாகுபாடுகள் போன்ற கூறுகள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. தற்போது அதிகமாக பேசப்படும் உலகமயமாதலும், அதனால் உள்ளூர் அளவிலும், சர்வதேச அளவிலும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றியும் பாடத்திட்டத்தில் இடம் பெற்றுள்ளது.