குழந்தை பாதுகாப்பு, மற்றும் இளம் வயதினருக்கான சட்ட நடவடிக்கையை இந்த பாடத்திட்டம் கொண்டிருக்கிறது. இது தொடர்பான கருத்துகளை நடைமுறை படுத்துவதில் ஏற்படும் சிக்கல்களை பற்றி இந்த படிப்பு விரிவாக விளக்கம் அளிக்கிறது. இச்சான்றிதழ் பெறுவோர் சமுதாயத்தில் இளம் வயதினருக்கான சட்டநடவடிக்கைகளை நடைமுறைபடுத்தி, திட்டங்களை நிறைவேற்றும் திறமையை பெறுவார்கள். இது சம்பந்தமான விழிப்புணர்வும், சட்டஉதவியும் தேவைப்படும் இடங்களில் இவர்களால் உதவமுடியும்.இந்த படிப்பு, குழந்தைகளுக்கு தொண்டு செய்யும் நிறுவனங்களுக்கான, அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து, திட்டங்களை நிறைவேற்றும் பணியில் சிறப்பாக செயல்பட உதவும்.