ரியல் எஸ்டேட் துறையில் ஏஜண்டுகளாக பணி புரிபவர்கள், விற்பனைப் பிரதிநிதிகள், நேரடி விற்பனைப் பணியாளர்கள் மற்றும் வீட்டுக்கடன் வாங்கித் தரும் ஏஜெண்டுகள் போன்றவர்களுக்காக இந்த சான்றிதழ் படிப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ரியல் எஸ்டேட் கொள்கைகள், சொத்து விதிமுறைகள், நிதி மதிப்பிடல், தரகு மற்றும் தொழில் சார் நடத்தைகள் போன்றவை குறித்த நுணுக்கமான விபரங்கள் இந்தப் பாடத்திட்டங்களில் இடம் பெற்றுள்ளன. இந்த சான்றிதழ் படிப்பின் மூலம் இவர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை கூடுதல் விபரங்களுடன் அணுக முடியும்.