இரு சக்கர வாகனங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இத்துறையில் வேலைவாய்ப்புகளும் பெருகியுள்ளன. மோட்டார் துறையில் பணியாற்ற தேவைப்படும் தொழில் நுட்ப அறிவையும், பயிற்சியையும் இந்த சான்றிதழ் படிப்பின் மூலம் பெற முடிகிறது. நிறுவனம் சார்ந்து பணியாற்றுவதற்கு தேவையான பயிற்சியுடன், சுயமாக தொழில் தொடங்குபவர்களுக்கு பயன்படும் விதமான பயிற்சியும் இந்த சான்றிதழ் படிப்பின் மூலம் வழங்கப்படுகிறது.