ஒரு ஆண்டு படிப்பான இதன் இதன் முக்கிய நோக்கம் மகப்பேறு மருத்துவத்துறை, பெண்கள் நலக்கல்வி மற்றும் குழந்தைகள் கல்வி பற்றிய அறிவையும், திறனையும், தகவல் தொடர்பையும் வளர்த்துக்கொள்வது. மேலும் அறியாத குழந்தைப்பருவத்தினரை வழிநடத்தும் திறனையும் வளர்ப்பது மற்றும் குறிப்பிட்ட பிரிவினரின் ஆரோக்கியத்தை வளர்ப்பது பற்றியும் அறிந்து கொள்ள உதவுகிறது.
தகுதி: மகப்பேறு மருத்துவம்/பெண்கள் நலக்கல்வி பிரிவில் குறைந்த பட்சம் இரண்டு (மாற்றிய விதிப்படி), அல்லது மூன்று (பழைய விதிப்படி) ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.