டிவி மற்றும் வீடியோ துறையில் ஆக்கப்பூர்வ சிந்தனைகள் உடைய இளைஞர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த துறையில் சான்றிதழ் படிப்பின் மூலம், மாணவர்கள் டிவி மற்றும் வீடியோ துறை சாந்த தொழில் நுட்பங்களையும், அடிப்படைக்கூறுகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. ஒளிபரப்புத் துறையில் புதிய சிகரங்களை அடைய டிவி நிகழ்ச்சி தயாரிப்பின் அடிப்படையை தெரிந்து கொள்வதும் அவசியம். டிவி நிகழ்ச்சிகளை இயக்குவது, தயாரிப்பது, காமிராவை கையாள்வது, சவுண்ட் மிக்சிங், லைட்டிங், அரங்க வடிவமைப்பு மற்றும் டிஜிட்டல் செயல்முறைகள் போன்றவற்றில் பணி புரிபவர்களுக்கும் இந்த சான்றிதழ் படிப்பு உபயோகமானதாக இருக்கும்.