இன்டர்நெட் மற்றும் இன்ட்ராநெட் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி அலுவலகங்களை நவீனமயமாக்குவது குறித்த விளக்கங்களுடன் இந்த சான்றிதழ் படிப்பு விளங்குகிறது. நவீன அலுவலக நிர்வாகம் மற்றும் இ-கவர்னன்ஸ் ஆகியவை தற்போது அரசு மற்றும் தனியார் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களிலும் அத்தியாவசிய தேவையாகி விட்டன. அதற்கான விபரங்களுடன், தகவல் தொழில் நுட்பம், இன்டர்நெட் சட்டங்கள், வரிகள், நிதி சார்ந்த விதிமுறைகள் போன்றவை பற்றியும் பாடத்திட்டங்களில் விவரிக்கப்பட்டுள்ளன.