நிர்வாகத் திறமையை வளர்க்கும் வகையில் அமைந்துள்ள பி.பி.எம். இன்டர்நேஷனல் பிசினஸ் படிப்பை தற்போது இளைஞர்கள் அதிகளவில் விரும்பி படிக்கின்றனர். அதேப்போல வெளிநாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பும் உள்ளது.
மூன்று ஆண்டுகள் கொண்ட இப்படிப்பில் சேர பிளஸ் 2 பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் பெரிய கல்வி நிறுவனங்கள் சிலவற்றில் மட்டுமே இப்படிப்பு வழங்கப்படுகிறது.
வெளிநாட்டு வணிக மேலாண்மை, வெளிநாட்டு நிறுவனங்களுடனான ஒத்துழைப்பு, வெளிநாட்டு நிறுவன முதலீடுகளை கையாளும் திறன், விளம்பரப்படுத்துதல் போன்றவற்றைக் கொண்டதாக இப்படிப்பு அமைகிறது.
இந்தியாவில் மட்டும் அல்லாமல், வெளிநாடுகளிலும் இப்படிப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தற்போது வெளிநாட்டு நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் பணியாற்றுவதால் இத்துறையில் பணிவாய்ப்பு அதிகரித்துள்ளது.