இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை இது. தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், இன்ஜினியரிங் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது இப்பாடப்பிரிவு.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் சாண்ட்விச் படிப்புக்கு மட்டும் ஓராண்டு கூடுதலாக (5 ஆண்டுகள்) படிக்க வேண்டும். இந்த இன்ஜினியரிங் மாணவர்கள் தொழிற்சாலைகளில் நேர்முகப் பயிற்சி பெறுவார்கள். இதனால் சாண்ட்விச் படிப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம்.
தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்கள்கூட, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன.
இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.