பி.ஏ. இசை பயில பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 3 ஆண்டுகள் கொண்ட இப்படிப்பை இசை ஆர்வமும், இசை அறிவும் கொண்டவர்கள் படிக்கலாம்.
கர்நாடக இசை, ஸ்வரங்கள், இசைக் கருவிகள் பற்றிய பாடங்கள் இடம்பெறும்.
இப்படிப்பை முடித்தவர்கள் இசைப் பள்ளிகளில் ஆசிரியராகவோ, இசைத் தொடர்பான நிலையங்களிலோ பணியாற்றலாம்.
மேற்கொண்டு எம்.ஏ. இசை பயின்றி ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம். தமிழகத்தில் ஒரு சில கல்வி நிலையங்களே இப்படிப்பை வழங்குகின்றன.
குயின் மேரிஸ் கல்லூரி, ரஜஸ் கல்லூரி, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவை பி.ஏ. இசை படிப்பை வழங்குகின்றன.