பி.டெக். பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் பாடப்பிரிவினை ஒரு சில கல்வி நிறுவனங்களே வழங்குகின்றன. அதில் ஐஐடி ரூர்கி முக்கிய இடம் பெறுகிறது. இப்படிப்பில் சேர, கல்வி நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணும், பிளஸ் பொதுத் தேர்வில் எடுத்த மதிப்பெண்ணும் முக்கியமாகும். பி.டெக். மெக்கானிக்கல் பட்டப்படிப்பு 8 செமஸ்டர்களைக் கொண்டதாகும். இப்படிப்பில், மின்சாதன தயாரிப்பு, உள்ளமைப்பு, செயல்படும் விதம் ஆகிய விவரங்கள் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது. 4ம் ஆண்டின் இரண்டு செமஸ்டர்களிலும் மாணவர்கள் திட்டவிளக்கப் பணிகள் செய்ய வேண்டியது இருக்கும். இப்படிப்பை முடித்தவர்கள், மேற்கொண்டு எம்.டெக். அல்லது எம்.இ. சேரலாம். இந்தியாவில் பி.டெக். மெக்கானிக்கல் முடித்தவர்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. மிகப்பெரிய மின்சாதன உற்பத்தி நிறுவனங்களில் பணிவாய்ப்புகள் காத்திருக்கின்றன. வெளிநாடுகளிலும் உயர்ந்த ஊதியத்தில் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்கள் இத்துறையில் ஆராய்ச்சியிலும் ஈடுபடலாம்.