உலகமயமாக்கல் சுற்றுலாத்துறையை லாபம் தரக்கூடிய வகையில் மாற்றியுள்ளது. ஹோட்டல், ரெஸ்டாரன்ட்கள் மற்றும் மருத்துவ வசதிகளுடன் கூடிய தங்குமிடங்களின் ஆச்சரியப்படத்தக்க வளர்ச்சி மாணவர்களுக்கு, உலக அளவில் இந்த கல்வி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
* மாணவர்களுக்கு நவீன ஹோட்டல் நிர்வாகம் பற்றி கற்றுத்தரப்படுகிறது.
* ஹோட்டல் தொழிலில் உள்ள சிக்கல்களை நன்கு புரிந்து கொள்ளவும், எதிர்கொள்ளவும் கற்றுத்தருகிறது.
* இதில் கேட்டரிங், மருத்துவபிரிவு, மார்கெட்டிங், அக்கவுன்டிங், நிதித்துறை, ஸ்டிராடர்ஜி, தகவல் பிரிவு மற்றம் பல்வேறு தனித்தனி பிரிவுகளில் திறமையை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்புகள் உள்ளது.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.