கணிதவியல் என்பது பொதுவாக எண்களைப் பற்றியும், வடிவங்களைப் பற்றியும் படிக்கும் கல்வி என்று கூறப்படுகிறது. ஆனால் இது, அமைப்பு, மாற்றம், வெளி போன்றவற்றைப் பற்றியது என்ற கணித அறிஞர்கள் வரையறை செய்கின்றனர். வணிகவியல், நில அளவீடு, வானிலை மதிப்பீடு போன்றவற்றில் கணிதத்தின் பயன்பாடு அதிகளவில் இருந்தாலும், இவற்றை தாண்டி கணிதவியலின் பயன்பாடு மேலும் பரந்துபட்டது. கணிதவியல் படிப்பில் அரித்மேடிக், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, திரிகோணமிதி மற்றும் கால்குலஸ் போன்ற பிரிவுகள் உள்ளடங்கியுள்ளன. இயற்பியல், கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல் போன்ற படிப்புகளுக்கு கணிதப்பாடம் அடிப்படையானது. கணிதவியல் படித்த மாணவர்களுக்கு ஆசிரியப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.