தலைசிறந்த பன்னாட்டு தொழிற்சாலைகளின் வருகை மற்றும் உள்நாட்டு தொழிற்சாலைகளின் விரிவாக்க பணிகள், தொழில் புரட்சி போன்ற காரணங்களினால் தொழில் துறை சார்ந்த படிப்புகளின் பக்கம் கல்வியாளர்களின் கவனம் திரும்பி வருகிறது. இதன் விளைவாக
உருவானது தான் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங்.
தொழிற்சாலைகளுக்கு தேவையான மனிதவளம், முதலீடு, உபகரணங்கள், ஆற்றல் வளங்கள், தகவல்கள் போன்ற அனைத்தையும் ஒருங்கிணைப்பதே தொழில்துறை பொறியியல் படிப்பின் முக்கிய நோக்கம். பைனான்சியல் இன்ஜினியரிங், குவாலிட்டி இன்ஜினியரிங், வேல்யூ இன்ஜினியரிங், பிராசஸ் இன்ஜினியரிங், புரொடக்ஷன் இன்ஜினியரிங் ஆகிய பொறியியல் துறைகளும் தொழில்துறை சார்ந்த படிப்புகளாக கருதப்படுகின்றன.
கல்வித்தகுதி
பிளஸ்2 வில் இயற்பியல், கணிதம் போன்ற பாடங்களை படித்திருப்பது அடிப்படை கல்வி தகுதியாக கருதப்படுகிறது. பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., முதுநிலை டிப்ளமோ போன்ற படிப்புகளில் இவற்றை இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களிலேயே படிக்கலாம். இவர்களுக்கு தகவல் தொடர்பு திறன் மிகவும் அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
வேலைவாய்ப்பு
குறைந்த செலவில் தேவையான மனித ஆற்றலை பெற முடியும் மற்றும் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த உகந்த சூழல் போன்ற காரணங்களினால் பல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவை மையமாக வைத்து தங்கள் கிளைகளை நிறுவி வருகின்றன. இதனால் இந்தியாவிலேயே தொழில்துறை பொறியியல் படித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் இவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
* ஐ.ஐ.டி., டில்லி
* டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் என்.ஐ.டி., ஜலந்தர், பஞ்சாப்
* ஆந்திரா பல்கலைக்கழகம், விசாகப்பட்டினம், ஆந்திரா
* டில்லி தொழில்நுட்ப பல்கலைக்கழகம், புதுடில்லி
* பி.எம்.எஸ்., பொறியியல் கல்லூரி, பெங்களூரு
* ஸ்ரீ ராம்தியோ பாபா கமலா நேரு பொறியியல் கல்லூரி, நாக்பூர்
* நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இண்டஸ்டிரியல் இன்ஜினியரிங், மும்பை