கடல் மற்றும் கடல் போக்குவரத்துத் தொடர்பான பொறியியல் வேலைகள் குறித்து கற்பிப்பதே மரைன் இன்ஜினியரிங் படிப்பாகும்.
கப்பல், படகுகள், எண்ணெய் கப்பல்கள் உள்ளிட்ட கடல் போக்குவரத்து வாகனங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் இப்படிப்பில் கற்பிக்கப்படும். போக்குவரத்து சாதனங்களை வடிவமைத்தல், உருவாக்குதல் பாதுகாத்தல் போன்றவை அடங்கியதே இப்படிப்பின் சாராம்சம். இப்படிப்பை முடித்தவர்கள் இந்த துறையிலேயோ அல்லது இத்துறை சார்ந்த பணிகளிலோ ஈடுபடலாம்.
பிளஸ் 2வில் இயற்பியல், வேதியியல், கணிதம் எடுத்து படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்களே இப்படிப்பை வழங்குகின்றன.
படித்து முடித்ததும் வேலை கிடைக்கும் துறைகளில் இதுவும் ஒன்று. கப்பல் கட்டுமான நிறுவனங்கள் ஏராளமான வேலை வாய்ப்பைக் கொண்டிருக்கின்றன. அரசுத் துறைகளிலும் இப்படிப்பை முடித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. வெளிநாடுகளிலும் இப்படிப்பிற்கு நல்ல எதிர்காலம் உள்ளது.