மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் எலக்ட்ரானிக்ஸ் துறையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டிங் ஆகிய துறைகளின் இணைவுதான் மெக்கட்ரானிக்ஸ். ஆட்டோமொபைல் போன்ற இயந்திரவியல் தொழில் துறைகளில் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களில் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
உற்பத்தித் தொழில் நிறுவனங்களிலும் ஆட்டோமொபைல் தொழில் நிறுவனங்களில் மட்டுமல்லாமல் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இப்படிப்புப் படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. வளர்ந்து வரும் புதிய துறை மெக்கட்ரானிக்ஸ். இத்துறையில் படித்த திறமையான மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன