தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் பலதரப்பட்ட இயந்திரங்களுடன் பாதுகாப்பாக பணி புரிவது பற்றி இந்தப் படிப்பு அமைந்துள்ளது. தொழிற்சாலைகளில் டிரெயினிங் லெவலில் இருப்பவர்கள், வேலை செய்யுமிடத்தில் எவ்வாறு பாதுகாப்புடன் நடந்து கொள்வது என்பதைப் பற்றி இதில் கற்றுத்தரப்படுகிறது. தொழிலாளர்கள் பாதுகாப்புடன் பணிபுரியும் அதே வேளையில், நிறுவனத்தின் உற்பத்திப் பெருக்கத்திலும் பங்கு கொள்ளும் விதமான பாடத்திட்டங்களுடன் இந்த சான்றிதழ் படிப்பு உள்ளது.