3 ஆண்டுகளைக் கொண்ட இந்த இளநிலை பட்டப்படிப்பு நகை வடிவமைப்பு பற்றிய முழு விவரங்களையும் மாணவர்களுக்கு கற்பிக்கும் வகையில் அமைந்துள்ளது. 6 செமஸ்டர்களைக் கொண்ட இந்த படிப்பில், வணிகம், பொருளாதாரம், மேலாண்மை, கற்களின் தரம் என பல்வேறு பாடப்பிரிவுகளும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
6வது செமஸ்டர் காலத்தில் மாணவர்களுக்கு நேரடி பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இப்படிப்பை வழங்குகின்றன. மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் ஜுவல்லரி மேனேஜ்மென்ட் இப்படிப்பை வழங்கும் கல்வி நிறுவனங்களுள் ஒன்றாகும்.
வேலை வாய்ப்பு
நகை தயாரிப்பு நிறுவனங்களிலும், கடிகாரம் உள்ளிட்ட உயர்தர பொருட்களின் தயாரிப்பு நிறுவனங்களிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. வைர நிறுவனம், முத்து, பவளம் போன்ற விலை உயர்ந்த மணி மற்றும் கற்களை கையாளும் நிறுவனங்களிலும் பணி வாய்ப்பு உள்ளது. பணியாற்றிய அனுபவத்தோடு வேறு நிறுவனத்திற்கு பணி மாற்றம் செய்யும் போது நல்ல வருமானம் கிடைக்கும்.