பி.டெக். நாவல் ஆர்க்கிடெக்சர் அன்ட் ஷிப் பில்டிங் படிப்பு இன்னும் மாணவர்களிடம் அதிக பிரபலமாகாமல் உள்ளது. அதில்லாமல் இந்தியாவில் ஒரு சில கல்வி நிறுவனங்கள் மட்டுமே இப்படிப்பை அளிக்கின்றன. பிளஸ் 2 மதிப்பெண் மற்றும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் நடத்தும் நுழைவுத் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்ணை அடிப்படையாகக் கொண்டு இதற்கான சேர்க்கை நடைபெறுகிறது.
கடல் வாகனங்களின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானததைப் பற்றிய படிப்பு இது. இப்போது வான்வழிப் போக்குவரத்துக்கு இணையாக கடல் வழிப் போக்குவரத்தும் வளர்ச்சியடைந்து வருவதால் இந்தத்துறை தற்போது வளர்ச்சி அடைந்த துறையாகவும், விரும்பத் தக்க துறையாகவும் உள்ளது. இந்திய கப்பல் படையிலும் இந்தப் படிப்புக்கான தேவை அதிக அளவிலேயே உள்ளது. ஆண், பெண் என எந்த வேறுபாடும் இன்றி இப்படிப்பை பயிலலாம்.
இந்தியாவில் கப்பல் கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் பல நிறுவனங்களில் இப்படிப்பை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் பணியாற்ற அதிக வாய்ப்புகள் உள்ளன.
கல்வி நிறுவனம்
கேரளாவல் உள்ள கொச்சின் யூனிவர்சிட்டி ஆப் சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி, விசாகப்பட்டினத்தில் உள்ள ஆந்திரா யூனிவர்சட்டி உள்ளிட்ட பல கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது.