கடலில் இயங்கும் பொருட்களை வடிவமைப்பது, பயன் படுத்துவது தொடர்பான படிப்பு தான் ஓஷன் இன்ஜினியரிங். படகு, கப்பல், நீர்மூழ்கி வடிவமைப்பில் இவர்கள் முக்கிய பங்காற்றுகின்றனர். உப்புத்தன்மை, நீரின் அழுத்தம், கடல் அலைகளை தாக்குப்பிடிக்கும் வகையில் வடிவமைக்க கற்றுத் தருகின்றனர்.
கடல் சார்ந்த அறிவியல் மற்றும் வடிவமைப்பு குறித்தும் கற்றுத் தருகின்றனர். தெர்மோ டைனமிக்ஸ், புளூயிட் மெக்கானிக்ஸ், எலெக்ட்ரிக்கல் சர்க்யூட் பற்றியும் இப்படிப்பில் கற்றுத் தரப்படுகிறது. டேட்டா அனாலிசிஸ், ஓஷன் இன்ஸ்ட்ரூமென்டேஷன், அண்டர் வாட்டர் அக்குஸ்டிக்ஸ், மரைன் ஹைட்ரோ டைனமிக்ஸ், ஓஷனோகிராபி, மரைன் ஜியோ மெக்கானிக்ஸ் போன்ற பாடங்கள் நடத்தப்படுகின்றன.
துறைமுகங்கள் வடிவமைக்கவும், கடலில் கட்டுமானங்கள் அமைக்கவும் ஓஷன் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டியது அவசியம். ஓஷன் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் உள்ளன. கடல் அரிப்பு, கடற்கரை எண்ணெய் வளம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சி பணிகளிலும் ஈடுபடலாம்.