பயணிகளுக்கான கப்பல்கள், சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஆகியவற்றின் இயக்கம் குறித்த பல்வேறு பயிற்சிகளை உள்ளடக்கியது இப்படிப்பு. கப்பலில் மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சார்ந்த பல்வேறு சாதனங்களை இயக்கவும் பழுது பார்க்கவும் கற்றுத்தரப்படும். இப்பாடப்பிரிவு மாணவர்களுக்குக் கப்பலில் நேர்முகப் பயிற்சியும் அளிக்கப்படும். இப்படிப்பில் சேர விரும்பும் மாணவர்களுக்குத் தேவையான உடல் தகுதியும் உரிய பார்வைத் திறனும் இருக்க வேண்டும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.