இன்ஜினியரிங் பாடப்பிரிவுகளில் முக்கியமான துறை மெக்கானிக்கல் இன்ஜினியரிங். தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இயந்திர சாதனங்கள், பொருள் உற்பத்தி முறைகள், இன்ஜினியரிங் வடிவமைப்பு, கம்ப்யூட்டர் பயன்பாடு போன்றவற்றை உள்ளடக்கியது
ஆட்டோமொபைல் நிறுவனங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் போன்ற பல்வேறு தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக் கிடைக்கும். தற்போது மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு கூட, தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலை கிடைக்கிறது. அரசுத் துறை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், தனியார் துறை நிறுவனங்களிலும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.