தாதுப் பொருட்களைத் தோண்டி எடுத்தல், சுரங்க இயந்திரங்களைப் பயன்படுத்துதல், சுரங்க நிர்வாகம், சுரங்கங்களில் கம்ப்யூட்டரின் பயன்பாடு ஆகியவற்றைக் கூறுவது மைனிங் எனப்படும் சுரங்கவியல்.
பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சுரங்கங்களில் மாணவர்கள் நேர்முகப் பயிற்சியும் பெற வேண்டியதிருக்கும். இந்திய சுரங்கச் சட்டப்படி, பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்பதால் மாணவிகள் இப்படிப்பில் சேர்த்துக் கொள்ளப்படுவதில்லை.
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் நிறுவனம், கோல் இந்தியா, யுரேனியம் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா, பிகார் தன்பாத்தில் உள்ள மத்திய சுரங்க ஆராய்ச்சி நிலையம், இந்தியன் டெட்டனேட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் மைனிங் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
நான்கு ஆண்டுப் படிப்பு இது. இதே துறையில் முதுநிலைப் படிப்புகளைப் படிக்க வாய்ப்புகள் உள்ளன.