கணிதவியல் என்பது எண்களைப் பற்றியும், வடிவங்களைப் பற்றியும் படிக்கும் அறிவியல் என்பார்கள். ஆனால் கணிதவியல் என்பது அமைப்பு, மாற்றம் மற்றும் வெளி பற்றிய கல்விமுறை என்கிறார்கள் நிபுணர்கள். இந்த இளநிலைப் படிப்பில் கணிதத்தின் முக்கிய கூறுகளான ஜியோமெட்ரி, அல்ஜீப்ரா, திரிகோணமிதி போன்றவற்றுடன், கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவுகளும் கற்றுத் தரப்படுகின்றன.
படிப்பு காலம் 3 ஆண்டுகள். இதே பிரிவில் முதுகலை உண்டு.